

சிஎஸ்கே அணியில் விளையாடிய நியூசிலாந்து ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ள சூழலில் ஆர்சிபி அணி வீரர்களான கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி, சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.
இந்நிலையில் மும்பை அணியில் மாற்று வீரராக உள்ள நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் குகலைனை கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாகத் தேர்வு செய்துள்ளது ஆர்சிபி அணி.
நியூசிலாந்து அணிக்காக குகலைன், 2 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2019-ல் சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற குகலைன், இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.