ராயுடு அரை சதம்: டெல்லிக்கு 137 ரன்கள் இலக்கு
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தி ராயுடு அரைசதமெடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
துபையில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் சீசனின் 50-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெஸ்ஸி ஆகியோர் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
அதிரடி ஆட்டக்காரர்கள் டெல்லி அணியின் பந்து வீச்சால் சற்று தடுமாற்றத்துடன் விளையாடியதால், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ருதுராஜ் 13 ரன்களுக்கும், டூ பிளெஸ்ஸி 10 ரன்களிலும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய உத்தப்பா அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்து 19 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து வந்த மொயின் அலி 5 ரன்களில் அக்ஸர் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த அம்பத்தி ராயுடு சற்று நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடி அரை சதம் அடித்தார். கேப்டன் தோனி அவருக்கு ஜோடியாக களமிறங்க ரன்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18 ரன்களுடன் தோனி வெளியேறினார்.
ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னுடன் களத்தில் இருக்க, ராயுடு 55 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தது.
137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
சென்னை அணியில் காயம் காரணமாக ரெய்னாவுக்கு பதிலாக உத்தப்பாவுக்கும், சாம் கரண், ஆஷிஃப்க்கு பதிலாக மீண்டும் தீபக், பிராவோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...