நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரோஹித் சர்மா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவாரா? பாண்டியாவுக்கு என்ன ஆச்சு?

இருவருடைய நிலைமை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறியதாவது:

News image
Updated On :20 செப்டம்பர் 2021, 9:38 am

DIN

ரோஹித் சர்மா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 2021 போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தோ்வு செய்தது. சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே அடித்தது. சென்னை வீரா் ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ரோஹித் சர்மாவும் பாண்டியாவும் கலந்துகொள்ளவில்லை. பொலார்ட், மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். இருவருடைய நிலைமை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறியதாவது:

Story image

ரோஹித் சர்மா வழக்கமான பேட்டிங் மற்றும் ஓட்டம் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இங்கிலாந்திலிருந்து தற்போதுதான் அவர் திரும்பியதால் மீண்டும் விளையாட சிறிது அவகாசம் தேவை என நினைத்தோம். எனவே அடுத்த ஆட்டத்தில் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். பாண்டியா பயிற்சி எடுத்துக்கொண்டார். அதில் அவருக்கு லேசாக வலி ஏற்பட்டதால் சில நாள்கள் அவகாசம் அளித்துப் பார்க்கலாம் என முடிவெடுத்தோம். பெரிய அளவில் பிரச்னை இல்லை என்றார். எனினும் பாண்டியா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் என அறியப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.