ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐபிஎல்: ஆர்சிபியை எளிதாக வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆர்சிபி 3-ம் இடத்தில் உள்ளது. 

News image
மொயீன் அலி
Updated On :25 செப்டம்பர் 2021, 6:32 am

DIN

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பா் கிங்ஸ் அணி.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு விராட் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் 13.2 ஓவர்களிலேயே 111 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழுந்ததால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறியது ஆர்சிபி. படிக்கல் 70 ரன்களும் கோலி 53 ரன்களும் எடுத்தார்கள். பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிதான இலக்கை சிரமம் இல்லாமல் அடைந்தது சிஎஸ்கே. ருதுராஜும் டு பிளெஸ்சிஸும் முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்தார்கள். ருதுராஜ் 38 ரன்களும் டு பிளெஸ்சிஸ் 31 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். ராயுடு 32 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆர்சிபி 3-ம் இடத்தில் உள்ளது. 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 9 7 2 14 +1.185
 2. தில்லி 9 7 2 14 +0.613
 3. பெங்களூர் 9 5 4 10 -0.720
 4. கொல்கத்தா 9 4 5 8 +0.363
 5. ராஜஸ்தான் 8 4 4 8 -0.154
 6. மும்பை 9 4 5 8 -0.310
 7. பஞ்சாப் 9 3 6 6 -0.345
 8. ஹைதராபாத்  8 1 7 2 -0.689

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.