பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாண்டியா உடற்தகுதி: முன்னாள் வீரர் சபா கரீம் எழுப்பும் கேள்விகள்

பாண்டியாவுக்குக் காயம் இருந்திருந்தால் இந்திய அணிக்கு எப்படித் தேர்வானார்?

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:18 am

DIN

ஹார்திக் பாண்டியாவின் உடற்தகுதி பற்றி இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எனினும் இதுபற்றி மும்பை அணி தரப்பிலிருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:

இந்திய அணிக்காக பாண்டியா தேர்வானபோது முழு உடற்தகுதியுடன் இருந்தாரா? அப்படி உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அவருடைய தேர்வு சரியே. மும்பை அணிக்காக இரு ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. அவருக்கு எப்போது காயம் ஏற்பட்டது? இந்திய அணித் தேர்வானபோது ஏற்பட்டதா அல்லது ஐபிஎல் போட்டிக்காகத் தயாராகும்போது ஏற்பட்டதா? சில விஷயங்களை முறையாக அறிவிக்க வேண்டியது அவசியம். 

பாண்டியாவுக்குக் காயம் இருந்திருந்தால் இந்திய அணிக்கு எப்படித் தேர்வானார்? பொதுவான விதிமுறை என்னவென்றால், உங்களிடம் உடற்தகுதி இல்லையென்றால் நீங்கள் நேஷனல் கிரிக்கெட் அகாதமிக்குச் சென்று உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். அதன்பிறகுதான் இந்திய அணிக்குத் தேர்வாக முடியும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.