புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சேவாக்கைப் பின்னுக்குத் தள்ளினார் பந்த்: ஐபிஎல்-இல் புதிய சாதனை!

டெல்லி கேபிடல்ஸுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ரிஷப் பந்த் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை முந்தியுள்ளார்.

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 12:47 pm

DIN


டெல்லி கேபிடல்ஸுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ரிஷப் பந்த் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை முந்தியுள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

கொல்த்தா பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஷப் பந்த் 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை பந்த் முந்தியுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும் இதனை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.