வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

டி20 உலகக் கோப்பை அணியில் இல்லாத ஷிகர் தவனின் புதிய சாதனை!

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுப்பதில் ஷிகர் தவன், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் இடையே கடும் போட்டி நடக்கிறது.

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 11:11 am

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 24 ரன்கள் எடுத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் தில்லி கேபிடல்ஸ் அணி வீரரான ஷிகர் தவன்.

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுப்பதில் ஷிகர் தவன், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் இடையே கடும் போட்டி நடக்கிறது.

மூவரும் 400 ரன்களைக் கடந்துள்ளார்.

நேற்று, ஷிகர் தவனைக் கடந்து முதலிடம் பிடித்தார் சஞ்சு சாம்சன். இன்று அவரை விடவும் 21 ரன்கள் கூடுதலாக எடுத்து 454 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் ஷிகர் தவன்.

இதுமட்டுமில்லாமல் இன்னொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 

2016 முதல் 2021 வரை கடந்த 6 ஐபிஎல் போட்டிகளிலும் ஒவ்வொரு முறையும் 450 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் ஷிகர் தவன். வேறு எந்த வீரரும் கடந்த 6 ஐபிஎல் போட்டிகளிலும் 450 ரன்களை எடுத்ததில்லை. இந்த வருடம் வேறு எந்த வீரராவது 450 ரன்கள் எடுத்தாலும் தவனின் சாதனையைத் தொட முடியாது.  2016 முதல் 2020 வரையிலான 5 ஐபிஎல் போட்டிகளிலும் வேறு எந்த வீரரும் ஒவ்வொரு முறையும் 450 ரன்களை எடுத்ததில்லை. எனவே இந்தச் சாதனையில் ஷிகர் தவனை வேறு யாராலும் மிஞ்சமுடியாது.

ஷிகர் தவன்: ஐபிஎல் போட்டி

2016 - 501 ரன்கள்
2017 - 479 ரன்கள்
2018 - 497 ரன்கள்
2019 - 521 ரன்கள்
2020 - 618 ரன்கள்
2021* - 454 ரன்கள்

இதில் உள்ள வேதனை, கடந்த 6 ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ச்சியாக நன்கு விளையாடி ரன்கள் குவித்தும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தவனுக்கு இடமில்லை என்பதுதான்.

Related Article

கணக்குகள் ஆரம்பம்: சன்ரைசஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?

வார்னர் - சன்ரைசர்ஸ் கூட்டணி பிரியப் போகிறதா?: பயிற்சியாளர் பதில்

தில்லி - கொல்கத்தா ஐபிஎல் ஆட்டம்: ரஸ்ஸல், பிருத்வி ஷா விலகல்

என்னிடம் வலிமை அப்டேட் கேட்டதை மறக்க முடியாது: மொயீன் அலி

மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.