ராஜஸ்தானை நொறுக்கியதால் மும்பைக்கு பிளேஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதா?

பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற போராடிக்கொண்டிருக்கும் மும்பை அணி...
ராஜஸ்தானை நொறுக்கியதால் மும்பைக்கு பிளேஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதா?

பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற போராடிக்கொண்டிருக்கும் மும்பை அணி, ராஜஸ்தானை வீழ்த்தி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. எவின் லூயிஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். நாதன் கோல்டர் நைல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு விளையாடிய மும்பை 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன், 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றிகளை மட்டும் பெற்று 12 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது. நெட் ரன்ரேட் -0.048.

இந்தப் பெரிய வெற்றியால் மும்பைக்கு பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதா?

மும்பைக்குப் பெரிய தடைக்கல்லாக இருப்பது கொல்கத்தா அணி தான். அந்த அணியும் 13 ஆட்டங்களில் 6 வெற்றிகளை மட்டும் பெற்று 12 புள்ளிகளுடன் இருந்தாலும் அதன் நெட் ரன்ரேட் சிறப்பாக உள்ளது. 0.294. இந்த ஒரு காரணம் தான் மும்பைக்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது.

நாளை இரவு ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தாவும் ராஜஸ்தானும் மோதுகின்றன. இந்த ஆட்டம்தான் மும்பையின் பிளேஆஃப் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிவிடும். 

கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும் மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் ஹைதராபாத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 

ஒருவேளை தற்போது சமநிலையில் இருக்கும் மும்பையும் கொல்கத்தாவும் கடைசி ஆட்டத்தில் தோற்றால்?

அப்போதும் மும்பைக்கு பிளேஆஃப் வாய்ப்பு அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றாலும் கொல்கத்தா அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் தான் மும்பையின் நெட் ரன்ரேட் கொல்கத்தாவை விடவும் அதிகமாக இருக்கும்.

வியாழன், வெள்ளி என இரு நாள்களிலும் பரபரப்பான தருணங்களை நாம் காணவிருக்கிறோமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com