ஐபிஎல் இறுதிச்சுற்றில் சிஎஸ்கே: சாதனைப் புள்ளிவிவரங்கள்

தில்லி அணியை வென்று ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு 9-வது முறையாக முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் இறுதிச்சுற்றில் சிஎஸ்கே: சாதனைப் புள்ளிவிவரங்கள்

தில்லி அணியை வென்று ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு 9-வது முறையாக முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.

துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய தில்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா 60 ரன்களும் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் ஹெட்மையர் 37 ரன்களும் எடுத்தார்கள். ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி பரபரப்பான முறையில் இலக்கை விரட்டி 9-வது முறையாக ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் 70, உத்தப்பா 63 ரன்கள் எடுத்தார்கள். கடைசிக்கட்டத்தில் ஜடேஜாவுக்கு முன்பு களமிறங்கிய தோனி 6 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறக்க முடியாத வெற்றியை அளித்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் இலக்கை விரட்டுவதில் தனக்கு நிகர் வேறு யாருமில்லை என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார் தோனி.

ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியை விடவும் அதிகமுறை இறுதிச்சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. 

ஐபிஎல் இறுதிச்சுற்று: கேப்டன்கள்

தோனி - 9
ரோஹித் சர்மா - 5
கம்பீர் - 2

ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு அதிகமுறை முன்னேறிய அணிகள்

சிஎஸ்கே - 9
மும்பை இந்தியன்ஸ் - 6
ஆர்சிபி - 3
கேகேஆர்/சன்ரைசர்ஸ் - 2
டெக்கான் சார்ஜர்ஸ், தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், புணே - 1

* 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021 என 9 முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. 2017-ல் புணேவுக்காக விளையாடியபோது ஒரு வீரராக இறுதிச்சுற்றில் தோனி பங்கேற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com