ஐபிஎல் 2021 போட்டியின் லீக் ஆட்டங்கள் அக்டோபர் 8, வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றன.
அன்றைய தினம் நடைபெறும் மதிய ஆட்டத்தில் மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளும் இரவு ஆட்டத்தில் ஆர்சிபி - தில்லி அணிகள் மோதுவதாக இருந்தன.
இதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மும்பை - சன்ரைசர்ஸ், ஆர்சிபி - தில்லி ஆகிய இரு ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் எனத் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெற்றது கிடையாது. பிறகு ஏன் இந்தப் புது முயற்சியை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது? இதற்குச் சொல்லப்படும் காரணம்?
ஐபிஎல் போட்டியில் இந்திய நேரப்படி மதியம் ஆரம்பிக்கும் ஆட்டங்களுக்கு ரேட்டிங் அவ்வளவாகக் கிடைப்பதில்லை என ஸ்டார் தொலைக்காட்சி பிசிசிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இதனால் சோதனை முயற்சியாக ஒரே நேரத்தில் இரு ஐபிஎல் ஆட்டங்களை நடத்திப் பார்க்க ஸ்டார் தொலைக்காட்சி ஆர்வம் காட்டியதாகவும் இதற்கு பிசிசிஐ சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது. ரேட்டிங் காரணமாகவே இரு கடைசி லீக் ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளன. இதில் கிடைக்கும் ரேட்டிங்கைப் பொறுத்து இதுபோல ஒரே நேரத்தில் இரு ஆட்டங்களைத் தொடர்ந்து நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
மேலும் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் புதிதாகச் சேர்க்கப்படும் 2 அணிகளுடன் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெற்றால் குறைந்த நாள்களில் பல ஆட்டங்களை நடத்தவும் வாய்ப்புள்ளது என்பதால் ஸ்டார் தொலைக்காட்சியின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதின் நபின் உள்பட 16 போ் பதவியேற்பு

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


