என் பந்துவீச்சை சிறப்பாக விளையாடிய வீரர் இவர் தான்: நரைன் பதில்
ஐபிஎல் போட்டியில் நரைன் பந்துவீச்சில் 2 இன்னிங்ஸில் 12 பந்துகளை எதிர்கொண்ட சேவாக்...


இந்திய முன்னாள் வீரர் சேவாக் தன்னுடைய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டதாக கேகேஆர் அணி வீரர் சுநீல் நரைன் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் மகத்தான வீரர்களில் ஒருவர் நரைன். 140 ஆட்டங்களில் விளையாடி 147 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 6.67.
இன்று தனது 150-வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் நரைன் ஒரு பேட்டியில் சேவாக்கைப் பாராட்டிக் கூறியதாவது:
சுழற்பந்துவீச்சில் சிறப்பாக விளையாடும் வீரர் என சேவாக்கைக் கூறலாம். அவருக்குப் பந்துவீசுவது எனக்குக் கடினமாக இருந்தது. அணி எந்தச் சூழலில் இருந்தாலும் அவர் எப்போதும் போல அதிரடியாகவே விளையாடுவார் என்றார்.
ஐபிஎல் போட்டியில் நரைன் பந்துவீச்சில் 2 இன்னிங்ஸில் 12 பந்துகளை எதிர்கொண்ட சேவாக், 23 ரன்களை எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 191.66. 1 சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் நரைனின் 23 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்களை எடுத்துள்ளார் சேவாக். 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்.
நரைனால் ஒருமுறை கூட சேவாக் விக்கெட்டை வீழ்த்த முடிந்ததில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...