தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேஜிஎஃப் 2 படத்தை கண்டுகளித்த ஆர்சிபி வீரர்கள் (விடியோ)

இதுகுறித்த படங்கள், விடியோ வெளியாகியுள்ளன.

News image

ஆர்சிபி அணி

Updated On :19 ஏப்ரல் 2022, 11:55 am

DIN

யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தை ஆர்சிபி வீரர்கள் கண்டுகளித்ததாக அணியின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2022 போட்டியில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை எடுத்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. இன்று லக்னெள அணிக்கு எதிராக மோதுகிறது.

இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள், யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தைக் கண்டுகளித்ததாக அந்த அணி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்சிபி அணியின் கரோனா தடுப்பு வளையப் பகுதியில் கேஜிஎஃப் 2 படம் திரையிடப்பட்டுள்ளது. இதுகுறித்த படங்கள், விடியோ வெளியாகியுள்ளன.

யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் 2 படம் முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 546 கோடி வசூலித்ததாகப் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.