தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லி அணியில் ஐந்து பேருக்கு கரோனா: ஐபிஎல் ஆட்டம் பற்றி பிசிசிஐ வெளியிட்ட புதிய அறிவிப்பு

புணே நகரில் நாளை நடைபெறுவதாக இருந்த தில்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம்...

News image

தில்லி அணி

Updated On :19 ஏப்ரல் 2022, 10:39 am

DIN

ரிஷப் பந்த் தலைமையிலான தில்லி கேபிடல்ஸ் அணி, நாளை (புதன்) பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தை புணேவுக்குப் பதிலாக மும்பையில் விளையாடவுள்ளது. 

கடந்த வாரம் தில்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். 

தற்போது தில்லி அணியில் பேட்ரிக் ஃபர்ஹர்ட், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உள்பட ஐந்து பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். செவ்வாய் அன்று நடைபெற்ற கரோனா பரிசோதனையில் ஐவரைத் தவிர தில்லி அணியைச் சேர்ந்த மற்றவர்களுக்கு கரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் தில்லி அணியின் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது, ஆனால் வேறு இடத்தில். 

புணே நகரில் நாளை நடைபெறுவதாக இருந்த தில்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட தில்லி அணியைச் சேர்ந்த ஐந்து பேரும் ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இரு பரிசோதனை முடிவுகளில் கரோனா இல்லை என்று உறுதியான பிறகு அவர்களால் அணியினருடன் இணைந்துகொள்ள முடியும். 

கடந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 2-ம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.