உம்ரான் மாலிக்கின் 153 கி.மீ. வேக யார்க்கர்: சஹா 'க்ளீன் போல்ட்'

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் உம்ரான் மாலிக் 153 கி.மீ. வேகத்தில் வீசிய பந்தில் ரித்திமான் சஹா போல்டாகி ஆட்டமிழந்தார்.
உம்ரான் மாலிக்கின் 153 கி.மீ. வேக யார்க்கர்: சஹா 'க்ளீன் போல்ட்'
Updated on
1 min read


குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் உம்ரான் மாலிக் 153 கி.மீ. வேகத்தில் வீசிய பந்தில் ரித்திமான் சஹா போல்டாகி ஆட்டமிழந்தார்.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா முதலில் ஹைதராபாத்தை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத்துக்கு ரித்திமான் சஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹைதராபாத்துக்கு நெருக்கடியளித்தார். இந்த ஐபிஎல் முழுவதும் மிரட்டல் வேகத்தில் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக் இந்த ஆட்டத்திலும் வேகத்துக்குப் பஞ்சம் இல்லாமல் மிரட்டினார்.

இதன் விளைவு 68 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் விளையாடி வந்த சஹா, மாலிக்கின் 152.8 கி.மீ. வேக யார்க்கர் பந்தில் போல்டானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com