மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குல்தீப் யாதவ் சுழலில் சிக்கியது கொல்கத்தா: டெல்லிக்கு 147 ரன்கள் இலக்கு

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

News image
நிதிஷ் ராணா
Updated On :28 ஏப்ரல் 2022, 3:59 pm

DIN


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக இந்த ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.

டெல்லி அணிக்கு முதன்முறையாகக் களணிறங்கிய சேத்தன் சகாரியா தனது முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்சை (3) போல்டாக்கி அசத்தினார். இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெங்கடேஷ் ஐயர் இந்த ஆட்டத்திலும் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பாபா இந்திரஜித் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் குல்தீப் யாதவ் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், கொல்கத்தா அணி 35 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்பிறகு, பாட்னர்ஷிப்பை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணாவுக்கு இருந்தது. இந்த இணை சிறப்பாக இன்னிங்ஸை கட்டமைத்தது.

அதிரடிக்கு மாற வேண்டிய நேரத்தில் குல்தீப் சுழலில் ஷ்ரேயஸ் (42) ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஆண்ட்ரே ரஸலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் ராணா மற்றும் ரிங்கு சிங் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பவுண்டரிகள் விளாசினர். நிதிஷ் ராணா 30-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார்.

இந்த இணை 7-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில், ரிங்கு சிங் கடைசி ஓவரில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நிதிஷ் ராணாவும் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரை முஸ்தபிஸுர் ரஹ்மான் சிறப்பாக வீசியதால், கொல்கத்தா அணியால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதேசமயம், 3 விக்கெட்டுகளை இழந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிஸுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், சேத்தன் சகாரியா மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.