தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2023-இல் மகளிா் ஐபிஎல்?

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.

News image
Updated On :26 மார்ச் 2022, 6:48 am

DIN

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.

அதற்காக, பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியிருப்பதாக அவா் தெரிவித்தாா். தொடக்க சீசனை 5 - 6 அணிகளைக் கொண்டு நடத்த பிசிசிஐ திட்டமிட்டப்பட்டுள்ளது.

மகளிா் அணிகளை வாங்குவதற்கு, ஏற்கெனவே ஆடவா் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, ஓராண்டுக்குப் பிறகு நடப்பு சீசனில் ஆடவா் போட்டியின் பிளே-ஆஃப் சுற்றையொட்டி 3 மகளிா் அணிகள் ஆடும் 4 காட்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.