47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

'பழைய பன்னீர்செல்வமாய்' மிரட்டிய தோனி: சென்னை 210 ரன்கள் குவிப்பு

​லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2022, 4:57 pm

DIN


லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி இன்னிங்ஸை தொடங்கினார் உத்தப்பா. இந்த அதிரடி அடுத்தடுத்த ஓவர்களிலும் தொடர்ந்தது. ஆனால், கெய்க்வாட் 1 மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

எனினும், உத்தப்பா அதிரடியைத் தொடர மொயீன் அலியும் அவருடன் இணைந்து சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதனால், சென்னை அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. 

பவுண்டரிகள் அடித்து விளையாடி வந்த உத்தப்பா 25-வது பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே ரவி பிஷ்னாய் சுழலில் வீழ்ந்தார்.

உத்தப்பா அமைத்த அடித்தளத்தைப் பயன்படுத்தி ஷிவம் துபே உள்பட அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் அதிரடி ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினர். சிறப்பான இன்னிங்ஸை விளையாடிய மொயீன் அலி 35 ரன்களுக்கு ஆவேஷ் கான் பந்தில் போல்டானார்.

இதன்பிறகு, துவே மற்றும் அம்பதி ராயுடு ரன் ரேட்டை 9-க்கு மேல் கடைப்பிடித்து வந்தனர்.

பாட்னர்ஷிப்பை கட்டமைத்து கடைசி நேர அதிரடிக்குத் தயாரான ராயுடு (27 ரன்கள்), ரவி பிஷ்னாய் சுழலில் வீழ்ந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துபே 30 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டு இன்னிங்ஸை தொடங்கினார். ஆண்ட்ரூ டை வீசிய கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆட்டமிழந்தாலும் தோனி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சிறப்பான பினிஷிங்கை கொடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். 

லக்னௌ தரப்பில் ஆவேஷ் கான், ஆண்ட்ரூ டை மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.