எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிஎஸ்கேவை விட்டுப் பிரிகிறாரா ஜடேஜா?: காசி விஸ்வநாதன் பதில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகுவதாக வெளியான செய்திகளுக்கு...

News image
Updated On :12 மே 2022, 7:53 am

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டி தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார். இதையடுத்து ஜடேஜா, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்த நெருக்கடியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் தேர்வானார். அதற்குப் பிறகு சிஎஸ்கே விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் தில்லிக்கு எதிராக சிஎஸ்கேவின் சமீபத்திய ஆட்டத்தில் காயம் காரணமாக ஜடேஜா விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமாகாததால் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து ஜடேஜா விலகியுள்ளார். சிஎஸ்கே அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே பிளேஆஃப்புக்கான போட்டியில் இருக்க முடியும் என்கிற நிலையில் ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயமும் அதனால் அவர் போட்டியிலிருந்து விலகியிருப்பதும் சிஎஸ்கே அணிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. கரோனா தடுப்பு வளையத்திலிருந்து வெளியேறி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஜடேஜா. 

இந்நிலையில் சிஎஸ்கே அணியைத் தொடர்ந்து வழிநடத்த தயாராக இருந்தும் தனக்கு ஆதரவாக இல்லாத காரணத்தால் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் மீது ஜடேஜா அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவது சந்தேகம் என்றும் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இத்தகவலை சிஎஸ்கே அணியின் காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார். சிஎஸ்கேவின் வருங்காலத் திட்டங்களில் ஜடேஜா நிச்சயம் உள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படியே அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று ஓர் ஆங்கில ஊடகத்துக்கு அவர் பேட்டியளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.