விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிருத்வி ஷாவுக்கு என்ன ஆச்சு?: ரிஷப் பந்த் பதில்

இந்த நிலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது.

News image
Updated On :12 மே 2022, 3:25 am

DIN

உடல்நலக்குறைவால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிருத்வி ஷா விளையாடவில்லை என தில்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 89, வார்னர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்கள்.

மே 1 அன்று கடைசியாக லக்னெளவுக்கு எதிராக விளையாடினார் தில்லி வீரர் பிருத்வி ஷா. அதன்பிறகு அவர் மீண்டும் விளையாடவில்லை. இதுபற்றி தில்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:

இந்த ஆட்டத்தில் பிருத்வி ஷாவின் பங்களிப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த நிலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு டைபாயிடோ அல்லது வேறு ஏதோவொரு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள் என்றார். மேலும் அணியின் வெற்றி பற்றி அவர் கூறியதாவது: நாங்கள் முதலில் பந்துவீசியது மகிழ்ச்சியளித்தது. 140-160 ரன்கள் நல்ல ஸ்கோர். அதை நாங்கள் அடைந்துவிட்டோம். ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இது எங்களுக்கு மிகச்சிறப்பான ஆட்டமாக அமைந்துவிட்டது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.