காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நரேந்திர மோடி திடலில் அமித் ஷா: ஐபிஎல் விழாவில் ஆரவாரம்

2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்துடன் கலந்துகொண்டு கண்டு களித்தார். 

News image
Updated On :29 மே 2022, 4:03 pm

DIN

2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்துடன் கலந்துகொண்டு கண்டு களித்தார். 

அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் அமித் ஷா கலந்துகொண்டதை திரையில் காட்சிப்படுத்தியபோது திடலில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அமைச்சர் அமித் ஷா அவர்களை நோக்கி கையசைத்தார். 

நடப்பாண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்திலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பாலிவுட் நடிகர்கள் பலர் பங்கேற்று நடனமாடினர். 

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில் பாடகர்கள் பென்னி தயாள், ஸ்வேதா மோகன், ஏ.ஆர்.அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.