டி20 கிரிக்கெட் என்பது சிலசமயங்களில் குரூரமானது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விகள் பற்றி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் ஒரு வருடத்தில் முதல் 7 ஆட்டங்களில் தோற்ற ஒரே அணி - மும்பை இந்தியன்ஸ். அதிகமுறை ஐபிஎல் கோப்பைகளை (5) வென்ற மும்பை அணி இதுபோல தோற்றிருப்பது யாரும் எதிர்பாராத ஒன்று. புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. இதனால் கடந்த வருடம் போல இந்தமுறையும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளது மும்பை.
நவி மும்பையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
நேற்றைய ஆட்டத்தின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த வருடம் மும்பை அணி அனுபவிக்கும் தோல்விகளை டி20 கிரிக்கெட்டில் இதர அணிகளும் எதிர்கொண்டுள்ளன. டி20 கிரிக்கெட் என்பது சிலசமயங்களில் குரூரமானது. ஆட்டத்தின் முக்கியமான தருணங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையாது. சிலசமயம் இரண்டு, மூன்று ரன்களிலும் கடைசிப் பந்திலும் டி20யில் தோற்பீர்கள். அதுபோன்ற நெருக்கடியான தருணங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை வெற்றி கொள்ள வேண்டும். இந்த வருடப் போட்டியில் மும்பைக்கு அவ்வாறு அமையவில்லை.
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சவாலான வருடமாக இம்முறை இருந்தாலும் முனைப்புடன் மும்பை வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இது புதிய அணி. இளைஞர்களைக் கொண்ட அணி. வெற்றிகளை அடைய சில காலம் ஆகும். இதுபோன்ற நெருக்கடியான தருணங்களை ஒற்றுமையுடன் கடக்க வேண்டும். சிக்கலுக்கான தீர்வுகளைத் தேடவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே நாளில் கடைப் பதிவு, 15 நாளில் கழிவுநீா் இணைப்பு: தில்லி அரசு புதிய அறிவிப்பு

வீட்டுச் சுவா் இடிந்து தொழிலாளி பலி

பழங்குடியினா் பிரச்னையைத் தீா்க்க தொலைநோக்குத் திட்டம்: அமைச்சா் வன்னியரசு

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




