ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

என் திறமை கடவுளின் பரிசா?: ஷமி பதில்

முதல் மூன்று ஓவர்களுக்குப் பிறகு அப்படியே நான்காவது ஓவரை வீசுகிறீர்களா என பாண்டியா கேட்டார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

கடுமையான உழைப்பினால் தான் நான் சிறப்பாகப் பந்துவீசுகிறேன் என குஜராத் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் லக்னெள அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சோ்த்தது. முகமது ஷமி 3, வருண் ஆரோன் 2, ரஷீத் கான் 1 விக்கெட் எடுத்தனா். அடுத்து விளையாடிய குஜராத் 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடித்து வென்றது. ராகுல் தெவாட்டியா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். ஆட்ட நாயகன் விருது ஷமிக்கு வழங்கப்பட்டது. 

இந்த ஆட்டத்தின் முதல் பந்திலேயே லக்னெள அணியின் கேப்டன் ராகுலை வீழ்த்தினார் ஷமி. பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது பந்துவீச்சு பற்றி அவர் கூறியதாவது:

நான் நன்கு பயிற்சியெடுத்து வந்துள்ளேன். இதுபோன்ற ஆடுகளம் இருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த நீளத்தில் வீசுவீர்களோ அதே நீளத்தில் வீசவேண்டும். மிகவும் புதிதான ஆடுகளம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நன்குப் பந்துவீச கடுமையாக உழைத்தேன். அதன்பிறகு தான் நான் நினைத்தவாறு பந்துவீச முடிந்தது. முதல் மூன்று ஓவர்களுக்குப் பிறகு அப்படியே நான்காவது ஓவரை வீசுகிறீர்களா என பாண்டியா கேட்டார். இல்லை, கடைசியாக வீசுகிறேன் என்றேன். ராகுலை வீழ்த்திய முதல் பந்தில் நல்லவிதமாகப் பந்துவீசவே நினைத்தேன். பந்து உங்கள் கைகளில் இருந்து அருமையாக வெளியேறும்போது கடவுளின் பரிசு எனக் கூறுவார்கள். அப்படி அல்ல. இதற்காக நான் உழைத்துள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.