கோபத்தின் உச்சத்தில் மேத்யூ வேட்: வைரலாகும் விடியோ

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரின் முடிவால் அதிருப்தியான குஜராத் டைட்டன்ஸ் வீரர் மேத்யூ வேட் கோபத்தில் ஹெல்மட்டை வீசி, பேட்டை எறிந்த விடியோ வைரலாகி வருகிறது.
கோபத்தின் உச்சத்தில் மேத்யூ வேட்: வைரலாகும் விடியோ


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரின் முடிவால் அதிருப்தியான குஜராத் டைட்டன்ஸ் வீரர் மேத்யூ வேட் கோபத்தில் ஹெல்மட்டை வீசி, பேட்டை எறிந்த விடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட் செய்தது. இதில் 3-வது வீரராகக் களமிறங்கி 16 ரன்கள் சேர்த்த மேத்யூ வேட், கிளென் மேக்ஸ்வெல் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

நடுவரின் முடிவை எதிர்த்து முறையிட்டார் வேட். பந்து பேட்டை உரசிச் செல்வது போல தெரிந்தது. அதனால்தான், வேட் நடுவர் முடிவை எதிர்த்தார். ஆனால், பந்து பேட்டை உரசியதற்கு தொழில்நுட்ப உதவியில் ஆதாரம் இல்லை. இதனால், கள நடுவர் கொடுத்த எல்பிடபிள்யு மூன்றாவது நடுவராலும் உறுதி செய்யப்பட்டது.

இந்த முடிவால் ஆத்திரமடைந்த வேட், களத்திலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார். விராட் கோலி அவரை சமாதானப்படுத்த முயற்சித்தார். இதன்பிறகு, ஓய்வறைக்குச் சென்ற வேட் கோபத்தின் உச்சத்தில் ஹெல்மட்டை தூக்கி எறிந்தார். தொடர்ந்து பேட்டால் ஓங்கி இரண்டு முறை கீழே அடித்தார்.

இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com