தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஐபிஎல் பிளேஆஃப்பில் விளையாடும் இதர மூன்று அணிகளிடமும் தோற்ற அணி எது?

இதில் உள்ள சுவாசியம், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற இதர 3 அணிகளுக்கு எதிராக விளையாடிய ஆட்டங்களில்...

News image
Updated On :24 மே 2022, 12:26 pm

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியில் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், லக்னெள, ஆர்சிபி ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

இதில் உள்ள சுவாசியம், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற இதர 3 அணிகளுக்கு எதிராக விளையாடிய ஆட்டங்களில் ஒன்றில் கூட லக்னெள அணி வெற்றி பெறவில்லை. பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாத அணிகளிடம் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது லக்னெள. 

பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற மற்ற அணிகளிடம் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. குஜராத் அணி அதிகபட்சமாக 4 ஆட்டங்களில் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது. ராஜஸ்தான், ஆர்சிபி அணிகள் தலா 3-2 என அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆனால் லக்னெள அணி மட்டும் குஜராத், ராஜஸ்தான், ஆர்சிபி அணி இந்த மூன்று அணிகளுடன் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

3-ம் இடம் பிடித்ததால் பிளேஆஃப் சுற்றில் பலம் பொருந்திய அணிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்றால் மட்டுமே லக்னெள அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். என்ன செய்யப் போகிறது ராகுல் தலைமையிலான லக்னெள அணி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.