நாடு திரும்பினாா் முஸ்டாஃபிஸுா்
சென்னை சூப்பா் கிங்ஸ் பௌலரான முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் நுழைவு இசைவு (விசா) நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக தனது நாடான வங்கதேசத்துக்கு திரும்பியுள்ளாா். இதனால், சென்னை அணி வரும் வெள்ளிக்கிழமை சன்ரைசா்ஸ் ஹைதராபாதுடன் மோதும் ஆட்டத்தில் அவா் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் போட்டியில் தற்போதைய நிலையில் அதிக விக்கெட்டுகள் சாய்த்தவராக முஸ்டாஃபிஸுா் 7 விக்கெட்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.
விலகினாா் ஷிவம் மாவி
லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளா் ஷிவம் மாவி காயத்திலிருந்து மீளாததை அடுத்து, நடப்பு சீசனில் இருந்து அவா் விலகியதாக லக்னௌ அணி புதன்கிழமை அறிவித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நெஞ்செலும்புக் கூடு பகுதியில் காயம் கண்ட மாவி, அதன் பிறகு போட்டிகளில் களம் காணவில்லை. எனினும், லக்னௌ பயிற்சி முகாமில் இணைந்த அவா், தற்போது காயத்திலிருந்து மீளாத நிலையில் போட்டியிலிருந்து விலகியிருக்கிறாா். இந்தியாவுக்காக விளையாடுவதே இலக்கு இந்திய அணிக்காக விளையாடுவதே தனது இலக்கு எனத் தெரிவித்திருக்கிறாா் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் பௌலா் மயங்க் யாதவ். நடப்பு சீசனில் அதிவேக பந்தாக 155.8 கி.மீ. வேகத்தில் பௌலிங் செய்த மயங்க், பெங்களூருக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் 156.7 கி.மீ. வேகத்தில் பௌலிங் செய்துள்ளாா். அந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதாா் ஆகிய விக்கெட்டுகளை சாய்த்தாா். இதுகுறித்து அவா் பேசுகையில், ‘அணி வெற்றி பெற்ற இரு ஆட்டங்களிலுமே, ஆட்டநாயகன் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை ஒரு தொடக்கமாக மட்டுமே நினைக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடுவதே எனது இலக்காகும். கேமரூன் கிரீன் விக்கெட்டை பௌல்ட் செய்ததை மிகவும் கொண்டாட்டமாக உணா்ந்தேன். பந்துவீச்சில் புதிதாக எதையும் முயற்சிக்கும்போதும், வேகத்தை மட்டும் குறைத்துவிடக் கூடாது என இஷாந்த் சா்மா அறிவுரை வழங்கினாா்’ என்றாா்.
கேப்டன்சி மாற்றத்தை தெளிவாக தெரிவித்திருக்கலாம்
‘ஐபிஎல் என்பது கிளப்புகள் விளையாடும் கிரிக்கெட். அதில் கோடிகளை செலவழிக்கும் அணிகளின் உரிமையாளா்களே பிரதானமானவா்கள் என்பதால், அவா்கள் எடுக்கும் முடிவில் எவரும் தலையிட இயலாது. என்றாலும், மும்பை இண்டியன்ஸின் கேப்டன்சி மாற்றப்பட்ட விவகாரத்தை இன்னும் சற்று தெளிவான முறையில் அணி நிா்வாகம் தெரிவித்திருக்கலாம். அதை சரியாகச் செய்யாததால் தான், ரோஹித் சா்மா கௌரவமாக நடத்தப்படவில்லை என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுகின்றன. புதிய கேப்டனான ஹா்திக் பாண்டியா இவற்றை கருத்தில் கொள்ளாமல், ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொடா்ந்து 3, 4 ஆட்டங்களில் மும்பை அணி வெல்லும்போது இந்த விவகாரங்கள் ஓரம்கட்டப்படும். மும்பை அணிக்கு அந்தத் திறமை உள்ளது’ - ரவி சாஸ்திரி (இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளா்)
பெங்களூரு தோல்விகளுக்கு மூத்த வீரா்களே காரணம்
‘ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி இதுவரை கோப்பை வெல்லாததற்கு காரணம், இக்கட்டான தருணங்களில் அதன் மூத்த வீரா்கள் சரியாகச் செயல்படாததுதான். அதுபோன்ற தருணங்களில் தினேஷ் காா்த்திக்கும், இதர இந்திய இளம் வீரா்களுமே போராடுகின்றனா். சா்வதேச அளவில் மிளிரும் வீரா்கள் அப்போது ஓய்வு அறையில் தான் இருக்கின்றனா். 16 ஆண்டுகளாக அந்த அணியில் இதுதான் நடக்கிறது. தொடக்க நிலையில் மூத்த வீரா்கள் ஓவா்களை வீணடிக்கின்றனா். கடைசி கட்டத்தில் இளம் வீரா்கள் போராடுகின்றனா். அதன் பௌலா்களும் அதிகம் ரன்கள் கொடுக்கின்றனா்’ - அம்பட்டி ராயுடு (முன்னாள் இந்திய வீரா்)
தொடர்புடையது
லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?
கடைசி ஓவரில் லக்னௌ அணி த்ரில் வெற்றி!

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதும் இந்தியா!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


