ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம், சால்ட் அதிரடி: கொல்கத்தா அணி 222 ரன்கள் குவிப்பு


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் பில் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் துவக்கம் அளித்தனர்.
அதில் பில் சால்ட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 14 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி களம் கண்டார். சுனில் நரைன் 10 ரன்களில் வெளியேற வெங்கடேஷ் ஐயர் உள்ளே வந்தார். ரகுவன்ஷி 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
வெங்கடேஷ் ஐயர் 16, ரிங்கு சிங் 24 என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிறொடுத்தனர். இறுதிகட்டத்தில் களமிறங்கிய ராமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் கேமரூன் கிரீன், யாஷ் தயாள் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...