டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி சமன் செய்துள்ளார்.
விராட் கோலி
விராட் கோலிபடம் | ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆர்சிபி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் (6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

விராட் கோலி
ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

நேற்றையப் போட்டியில் 70 ரன்கள் அடித்தன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 500 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அவர் 7-வது முறையாக 500 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 500 ரன்கள் எடுத்த வீரர் என்ற டேவிட் வார்னரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விராட் கோலி ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com