இதைச்செய்தால் வெற்றி நிச்சயம்: கேகேஆர் வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கேகேஆர் அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கேகேஆர் வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை.
கேகேஆர் வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை. படம்: கேகேஆர் / எக்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கேகேஆர் அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கிழக்கு தில்லி தொகுதி, மக்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தன்னை அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு பாஜக தலைமைக்கு அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அணியின் வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக அவர்களது சொந்த அணியின் மண்ணுக்கு வருகை புரிந்துள்ளனர்.

கேகேஆர் வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை.
உலக சாதனை படைத்த அயர்லாந்து வீரர்!

இந்நிலையில் கம்பீர் பேசிய விடியோவை கேகேஆர் வெளியிட்டுள்ளது. அதில் கம்பீர் பேசியதாவது:

மிகவும் புகழ்பெற்ற, வெற்றிகரமான அணிக்காக நீங்கள் விளையாடவுள்ளீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தோரணையுடன் களத்தில் விளையாடுங்கள். இந்த சீசனை இன்று முதல் தொடங்குகிறோம். உடல், மனம், திறமை ரீதியாக எல்லாவற்றையும் அணிக்காக கொடுங்கள்.

கேகேஆர் வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை.
ஆர்சிபி வீராங்கனைக்கு 'நொறுங்கிய கண்ணாடி'யைப் பரிசளித்த டாடா!

ஒன்றை மட்டும் முக்கியமாக நினைக்கிறேன். அனைத்து வீரர்களுக்கும் சுதந்திரம் அளிக்கப்படும். என்னுடன் விளையாடியவர்களுக்கு என்னைப் பற்றி ஒன்று தெரியும். அது - அணியில் அனைவரும் சமமாக நடத்தப்படுவர். சீனியர், ஜுனியர், உள்ளூர் கிரிக்கெட் வீரர், சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பாகுபாடு இல்லை. ஏனெனில், நாம் அனைவருக்கும் ஒரேயொரு குறிகோள்தான். அதாவது ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான். எனவே, அனைவரும் அந்த எளிமையான பாதையை தேர்ந்தெடுங்கள். இப்படி செய்தால் வெற்றி நிச்சயம்.

மே 26ஆம் நாள் நாம் அங்கு இருக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் தரவேண்டும். இப்போதே பயிற்சியைத் தொடங்குகிறோம். நாம் போராடினால் நிச்சயமாக பல வெற்றிகளை அடையலாம். அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் சந்தேகம் கேட்கலாம். நான் எனது நிலையில் இருந்து நேர்மையாக பதிலளிப்பேன். சுதந்திரமாக விளையாடுங்கள் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com