2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பெங்களூருவுக்கு 177 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2024, 3:58 pm

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய பிரபசிம்ரன் சிங் (25 ரன்கள்), லியம் லிவிங்ஸ்டன் (17 ரன்கள்), சாம் கரண் (23 ரன்கள்), ஜித்தேஷ் சர்மா (27 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

19 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 156 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷஷாங் சிங் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். அவர் 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். யஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.