நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோலி அதிரடி- ஆர்சிபி முதல் வெற்றி

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

Shailendra Bhojak

Updated On :25 மார்ச் 2024, 5:56 pm

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் முதலில் பேட் செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக கோலி 77 ரனகள் அடித்து அசத்தினார். படிதார் 18, அனுஜ் ராவத் 11 ரன்கள் எடுத்தனர்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவையானபோது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார் தினேஷ் கார்த்திக். 2வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை பதிவு செய்தார். 10 பந்துகளில் 28 ரன்கள் அடித்து வெற்றியை ஆர்சிபி பக்கம் திருப்பினார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

0 பந்துகளில் 28 ரன்கள் அடித்து வெற்றியை ஆர்சிபி பக்கம் திருப்பினார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்

0 பந்துகளில் 28 ரன்கள் அடித்து வெற்றியை ஆர்சிபி பக்கம் திருப்பினார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் - Shailendra Bhojak

சுருக்கமான ஸ்கோர் கார்டு:

விராட் கோலி-77,

டு பிளெஸ்ஸி- 3

கேமரூன் கிரீன் - 3,

ரஜத் படிதார் - 18,

க்ளென் மேக்ஸ்வெல்- 3,

அனுஜ் ராவத் - 11,

தினேஷ் கார்த்திக் - 28*,

மஹிபால் லோம்ரோர் - 17*

பஞ்சாப் பௌலிங்:

சாம் கர்ரன், ஹர்ஷல் படேல் தலா - 1 விக்கெட்

ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகள்

டி20 போட்டிகளில் 50க்கும் அதிகமான ரன்களை 100முறை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.