புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.

News image

ரியான் பராக்

படம் | AP

Updated On :28 மார்ச் 2024, 3:59 pm

DIN

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் இன்று (மார்ச் 28) நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், பட்லர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், ரியான் பராக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி சேர்ந்தனர்.

Story image

இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருப்பினும், அஸ்வின் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். துருவ் ஜுரெல் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது. தில்லி கேப்பிடல்ஸ் தரப்பில் கலீல் அகமது, முகேஷ் குமார், ஆண்ட்ரிச் நோர்கியா, அக்‌ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேப்பிடல்ஸ் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.