
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக ஆட்டம் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்து வருகிறது. ஆட்டம் மழையின் காரணத்தால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
கொல்கத்தா அணி 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.