ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது.
முதலில் ஆடிய குஜராத் 231 ரன்கள் எடுக்க அடுத்து ஆடிய சிஎஸ்கே அணியினால் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ஃப்ளே ஆஃப்-இல் நுழைய கடினமாகியுள்ளது.
இந்தப் போட்டியின் தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:
எங்களது அணியின் ஃபீல்டர்கள் சரியாக தங்களது வேலையை செய்யவில்லை. 10-15 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். செயல்படுத்துதலைப் பொறுத்தவரையில் நாங்கள் சிறப்பாகவே செய்தோம். வீரர்கள் நன்றாக விளையாடும்போது நாம் கட்டுப்படுத்த முடியாது. தோல்விக்குப் பிறகு கடினமான அடுத்த போட்டி ஒன்று விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்காக தயாராக வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.