
ஐபிஎல் கோப்பையுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மெரினா கடற்கரையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 26) நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
போட்டிக்கு முன்பாக இறுதிப்போட்டியில் மோதிக் கொள்ளும் இரு அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் மெரினா கடற்கரையில் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர். இதனை ஐபிஎல் நிர்வாகம் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ஐபிஎல் கோப்பையுடன் இரு அணியின் கேப்டன்களும் உற்சாகமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் பின்வருமாறு:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.