மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தில்லி அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!

தில்லி அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு.

News image
Updated On :10 ஏப்ரல் 2025, 4:28 pm

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் அக்‌ஷர் படேல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் இருவரும் களமிறங்கினர்.

இருவரும் இணைந்து தில்லியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அதிலும், ஸ்டார்க் ஓவரில் பில் சால்ட் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். இதனால், 3 ஓவர்களிலேயே அந்த அணி 60 ரன்களைக் கடந்தது.

இவர்கள் இருவரும் விளையாடிய விதத்தைப் பார்த்தபோது ஒருகட்டத்தில் 280 ரன்களைக் கடக்கும் என்றே தோன்றியது. பில் சால்ட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டானார். விராட் கோலி 22 ரன்களிலும், படிக்கல் ஒரு ரன்னிலும், கேப்டன் ரஜத் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதற்குப் பின்னர் ரன் வேகம் தளர்ந்தது. லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், க்ருனால் பாண்டியா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில், அதிரடி காட்டிய டிம் டேவிட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரியுடன் 37 ரன்களில் களத்தில் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டும் சேர்த்தது. முதல் 6 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்த ஆர்சி அணி அடுத்த 14 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. தில்லி அணியில் நிகம், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.