கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

13 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கேவின் கோட்டை தகர்ந்தது! கொல்கத்தா அபார வெற்றி!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி.

News image
Updated On :11 ஏப்ரல் 2025, 11:01 pm IST

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் விளையாடியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். டெவான் கான்வே 12 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ராகுல் திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன், ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் ஹூடா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இன்றையப் போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கிய எம்.எஸ்.தோனி 1 ரன்னில் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய ஷிவம் துபே 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி மற்றும் வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் எந்தவித தயக்கமுமின்றி ஆட்டத்தை விரைவாக முடிக்க முனைப்பு காட்டினர்.

குயிண்டன் டிகாக் - சுனில் நரைன் இருவரும் இணைந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்தனர். சுனில் நரைன் 44 ரன்களும்(2பவுண்டரி, 5 சிக்ஸர்), டிகாக் 23 ரன்களும்(3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர். அவரகளுக்குப் பின்னர் வந்த ரஹானே - ரிங்கு சிங் இருவரும் இணைந்து கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முடிவில், 10.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை தரப்பில் கம்போஜ், நூர் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி 13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை அணி தொடர்ச்சியாக 5 வது தோல்வியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக 3-வது தோல்வியாக அமைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.