நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

ஸேன் கிரீன், அலெக்ஸாண்டரின் போராட்டம் வீண்; ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!

முத்தரப்பு டி20 தொடரில் நமீபியாவுக்கு எதிரானப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :31 ஆகஸ்ட் 2026, 10:10 pm IST

முத்தரப்பு டி20 தொடரில் நமீபியாவுக்கு எதிரானப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றையப் போட்டியில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

ரியான் பர்ல் அரைசதம்; நமீபியாவுக்கு 196 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ரியான் பர்ல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 32 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பென் கரண் 38 ரன்கள், பிராட் ஈவன்ஸ் 37* ரன்கள், பிரையன் பென்னட் 32 ரன்கள், மருமானி 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நமீபியா தரப்பில் கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பெர்னார்டு, ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் ஹெய்ங்கோ தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஸேன் கிரீன், அலெக்ஸாண்டரின் போராட்டம் வீண்!

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

நமீபியா அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. லோரன் ஸ்டீன்கேம்ப் 6 ரன்கள், ஜேன் ஃபிரைலிங்க் 22 ரன்கள், கெர்ஹார்டு எராஸ்மஸ் 12 ரன்கள், ஜேன் நிக்கோல் லாஃப்டி ஈட்டன் 20 ரன்கள், ஜேஜே ஸ்மித் 6 ரன்கள், ரூபென் 8 ரன்கள் எடுத்தனர்.

அதன் பின், ஸேன் கிரீன் மற்றும் அலெக்ஸாண்டர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். ஸேன் கிரீன் 26 பந்துகளில் 54 ரன்களும் (7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) , அலெக்ஸாண்டர் 29 பந்துகளில் 56 ரன்களும் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் பிராட் ஈவன்ஸ் 3 விக்கெட்டுகளையும், பிரையன் பென்னட் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பிளெஸ்ஸிங் முசராபானி, சிக்கந்தர் ராஸா மற்றும் வெலிங்டன் மசகட்ஸா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக விளையாடிய பிராட் ஈவன்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Summary

Zimbabwe won the match against Namibia by 5 runs in the tri-nation T20 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.