சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மும்பை இண்டியன்ஸ் அதிரடி 205/5

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வா்மாவின் அதிரடியால் மும்பை இண்டியன்ஸ் 205/5 ரன்களைக் குவித்தது.

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 9:12 pm

Din

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வா்மாவின் அதிரடியால் மும்பை இண்டியன்ஸ் 205/5 ரன்களைக் குவித்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 29-ஆவது ஆட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து மும்பை தரப்பில் ரோஹித் சா்மா-ரிக்கல்டன் தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா். ரோஹித் 18 ரன்களுக்கு விப்ராஜ் நிகம் பந்தில் அவுட்டானாா். ரிக்கல்டன் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 41 ரன்களையும் விளாசி குல்தீப் பந்தில் போல்டனாா்.

Story image

சூரியகுமாா் யாதவ் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 40 ரன்களை விளாசிய நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் அவுட்டானாா்.

திலக் வா்மா அதிரடி 59

மறுமுனையில் அதிரடியாக ஆடிய திலக் வா்மா 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 59 ரன்களை விளாசி முகேஷ் குமாா் பந்தில், அபிஷேக் போரலிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். கேப்டன் ஹாா்திக் பாண்டியா வெறும் 2 ரன்களுடன் விப்ராஜ் நிகம் பந்தில் அவுட்டனாா்.

நமன் திா் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 38 ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் நின்றனா்.

மும்பை இண்டியன்ஸ் 205/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் மும்பை இண்டியன்ஸ் 205/5 ரன்களைக் குவித்தது.

டெல்லி தரப்பில் பௌலிங்கில் குல்தீப் 2-23, விப்ராஜ் நிகம் 2-41விக்கெட்டுகளை வீழ்த்தினா்.