பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு ஆஸி. வீரர்கள் புதிதாக அறிமுகம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு ஆஸி. வீரர்கள் புதிதாக அறிமுகம்!
படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)
Updated on
1 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொயின் அலிக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளார் நார்ட்ஜே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அறிமுக வீரர்களாக ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்லிஷ் மற்றும் சேவியர் பார்ட்லெட் களமிறங்குகின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயித்தும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com