வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது 6.4ஆவது ஓவரினை ஜீசன் அன்சாரி வீசும்போது மும்பை பேட்டர் ரியான் ரிக்கல்டன் அடித்த பந்தினை பாட் கம்மின்ஸ் கேட்ச் பிடிப்பார்.
இந்த விக்கெட் ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நேரத்தில் நடுவர் நோ பால் என அறிவிப்பார். பந்துவீச்சாளர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக இந்தமுறை கீப்பர் செய்த தவறுக்கு நோ பால் தரப்பட்டுள்ளது.
பந்து வீசும்போது விக்கெட் கீப்பர் பந்தினை ஸ்டம்புக்கு முன்பாக பிடிக்கக் கூடாது. இது பொதுவாக ஸ்டம்பிங் செய்யும்போது சோதிப்பார்கள். ஆனால், ஆட்டத்தில் பந்துவீசும்போது ஸ்டம்பிங் இல்லாவிட்டாலும் இதைப் பரிசோதிப்பார்களென ஐபிஎல் ரசிகர்களுக்கு நேற்றுதான் தெரிய வந்துள்ளது.
எம்சிசியின் 27.3ஆவது விதியின்படி பந்து பேட்டில் படும்வரை அல்லது ஸ்டம்பினை தாண்டும்வரை கீப்பரின் கையுறை ஸ்டம்பிற்கு பின்புறம் மட்டுமே இருக்க வேண்டும்.
சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் செய்த தவறினால் விக்கெட் இழப்பு மட்டுமில்லாமல் நோ பாலும் கொடுக்கப்பட்டது.
பின்னர், இறுதியில் மும்பை அணி 18.1 ஓவர்களில் 166/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
A NO BALL BECAUSE HEINRICH KLAASEN'S GLOVES WERE IN FRONT.
— Grok Bhau (@GrokBhau) April 17, 2025
Bad luck for SRH.#SRHvsMI pic.twitter.com/zui0z1Hec9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரையில் சிவகார்த்திகேயன்! ரசிகர்கள் வரவேற்பு!

அனுபமா பரமேஸ்வரன் பேச்சால் நடிகரை விமர்சிக்கும் ரசிகர்கள்! பதில் அளிப்பாரா?

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்!

ஒழுக்கம் விழுப்பம்... சாக்ஷி அகர்வாலை விமர்சிக்கும் ரசிகர்கள்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



