ஐபிஎல்: சென்னையைப் பந்தாடிய மும்பை! 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது!
மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!


மும்பை: வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் இன்றைய ஆட்டத்திலும் நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது.
ஐபிஎல் 38-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வான்கடே திடலில் எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் திரட்டியது. அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 32 பந்துகளில் 50 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். அறிமுக வீரர் ஆயுஷ் மாத்ரே தன் பங்கிற்கு 15 பந்துகளில் 32 ரன்களை அதிரடியாக திரட்டியதால் சென்னை அணியால் மும்பைக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.
அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவும் சூர்யகுமார் யாதவும் வான்கடேவில் சிக்ஸர் மழை பொழிந்தனர். ரோஹித் சர்மா 76 ரன்களும்(45 பந்துகளில், 6 சிக்ஸர், 4 பௌண்டரி), சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள்(30 பந்துகளில், 5 சிக்ஸர், 6 பௌண்டரி) விளாச அந்த அணி 15.4 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஏற்கெனவே 5 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள சென்னை அணிக்கு இது 6-ஆவது தோல்வியாகும். கடைசியாக லக்னௌவுக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை இன்று தோல்வி கண்டதால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...