
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார்.
சன்ரைசர்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. இஷான் கிஷன் ஆட்டமிழக்காமலே வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீபக் சஹார் வீசிய 2.1ஆவது ஓவரில் இஷான் கிஷன் அடித்த பந்து கீப்பரிடம் செல்லவும் நடுவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்க இஷான் கிஷன் ரிவிவ் கேட்காமலேயே நடந்து சென்றார்.
இந்த விக்கெட்டுக்கு ஹார்திக் பாண்டியா மட்டுமே ஓரளவுக்கு நம்பிக்கையுடன் கேட்டார்.
பின்னர் அல்ட்ரா எட்ஜ் சோதனையில் பந்து பேட்டில் எங்குமே படவில்லை எனத் திரையில் காண்பிக்கப்பட்டது.
இதைப் பார்த்த இஷான் கிஷன் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், கிரிக்கெட் ரசிகர்களோ இது சூதாட்டம் எனக் கூறி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.