ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2-ல் பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது.
அனைவரும் வியக்கவைக்கும் வகையில் 204 ரன்கள் இலக்கை விரட்டி அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87* ரன்கள் விளாசி சிக்ஸருடன் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார்.
மேலும், மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றார் ஷ்ரேயாஸ் ஐயர். நாளை(ஜூன் 3) நடைபெறும் மகுடத்துக்கான ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாதியா இருவரும் இணைந்து கேக் வெட்டினர். கேக்கை ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஊட்டிய நெஸ் வாதியா வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.
இதைக் கண்டு ஒருவிதமான முகச் சுழிப்புடன் ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்து கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ஷ்ரேயாஸ் ஐயர் அங்கிருந்து நகர்ந்தார். இதற்கான விடியோக்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Ness Wadia kissed Iyer on the cheek but he Swiped it off with a Napkin ððð𤣠pic.twitter.com/KWSZrRty5J
— Sukham ð (@LionsDenPBKS) June 2, 2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவிஎஸ் லக்ஷ்மனுக்கு நன்றி தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர்! காரணம் என்ன?

கேப்டனாக முதல் டி20 தொடர் வெற்றி; ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதென்ன?
இப்படியும் ஒரு சாதனையா? எம்.எஸ். தோனி, கோலியை பின்னுக்குத் தள்ளிய ஷ்ரேயாஸ்!

இந்திய அணி தொடர்ச்சியாக டி20 தொடர்களை இழக்க இதுதான் காரணம்: ஷ்ரேயாஸ் ஐயர்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



