FOLLOW US

ON GOOGLE DISCOVER

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

இப்படியும் ஒரு சாதனையா? எம்.எஸ். தோனி, கோலியை பின்னுக்குத் தள்ளிய ஷ்ரேயாஸ்!

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயரை பற்றி...

News image

ஷ்ரேயாஸ் ஐயர். - படம்: எக்ஸ்.

Updated On :24 ஜூலை 2026, 4:39 pm IST

டி20 போட்டிகளில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்து ஷ்ரேயாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜூலை 23) ஹாராரேயில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார்.

அவர் டாஸ் வென்ற போது புதிய சாதனை ஒன்றை படைத்தார். அதாவது, டி20 போட்டிகளில் இந்திய கேப்டன்களில் அதிகமுறை தொடர்ச்சியாக டாஸ் வென்றவர் என்ற புதிய சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

கடந்த ஜூன் மாதம் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக டாஸை வென்றிருந்தார்.

நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் டாஸை வென்றதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வசமிருந்த சாதனையைத் தனதாக்கினார்.

இதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தோனி, 7 போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸில் வெற்றி பெற்றிருந்தார். விராட் கோலி 6 முறை தொடர்ச்சியாகவும், அவரைத் தொடர்ந்து ரோஹித் மற்றும் தோனி இருவரும் உள்ளனர். உலகளவில் பஹாமாஸ் அணியின் கேப்டன் கிரிகோரி டெய்லர் 7 முறை தொடர்ச்சியாக டாஸ் வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக டாஸ் வென்றவர்கள்

  • 8- ஷ்ரேயாஸ் ஐயர் (2026 ஜூன் முதல் ஜூலை வரை)

  • 7 - எம்.எஸ். தோனி (2010 மே முதல் 2012 பிப்ரவரி வரை)

  • 6 - விராட் கோலி (2019 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை)

  • 5 - ரோஹித் சர்மா (2020 பிப்ரவரி முதல் 2022 பிப்ரவரி வரை)

  • 5 - எம்.எஸ். தோனி (2007 செப்டம்பர்)

Summary

After seven matches, Shreyas Iyer has finally tasted victory as captain, and that too in commanding fashion. Iyer expressed delight after India cruised to a seven-wicket win over Zimbabwe in the opening game of the three-match T20I series in Harare on Thursday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.