IPL award winners. (Pics from X, IPL)
ஐபிஎல் விருது வென்றவர்கள். படங்கள்: எக்ஸ் / ஐபிஎல்

ஐபிஎல் 2025: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், வளரும் வீரர் விருது யாருக்கு? முழு விவரம்!

ஐபிஎல் 2025 தொடரில் விருது வென்றவர்களின் பட்டியல்...
Published on

ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசன் நேற்றுடன் (ஜூன்.3) முடிவடைந்தது. இதில் ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

18 ஆண்டுகளாக போராடி வரும் பஞ்சாப் கிங்ஸ் தனது கோப்பை கனவை பூர்த்தி செய்யாமல் இருக்கிறது.

இந்தத் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிக ரன்கள் அடித்து அசத்தினார். குஜராத் அணிக்காக விளையாடி சாய் சுதர்சன் 759 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் கோப்பை வென்ற அணிக் ரூ.20 கோடி ரொக்கத் தொகை அளிக்கப்பட்டது. இறுதிப் போட்டியில் தோற்ற பஞ்சாப் அணிக்கு ரூ.12.50 கோடி வழங்கப்பட்டது.

ஐபிஎல் 2025 விருதுகள்- முழு விவரம்

1. ஆரஞ்சு கேப் (அதிக ரன்களுக்காக) - சாய் சுதர்சன் (759 ரன்கள்)

இந்த சீசனில் குஜராத் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய சாய் சுதர்சன் 759 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 54.21ஆக இருந்தது.

பரிசு: ரூ.10 லட்சம்

2. பர்பிள் கேப் (அதிக விக்கெட்டுக்காக) - பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்டுகள்)

குஜராத் அணிக்காக விளையாடிய பிரசித் கிருஷ்ணா 15 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் எடுத்தார்.

பரிசு: ரூ.10 லட்சம்

3. மிகவும் மதிப்பு மிக்க வீரர் - சூர்யகுமார் யாதவ் (320.5 புள்ளிகள்)

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 15 போட்டிகளில் 717 ரன்கள் குவித்தார். சராசரி 65.18ஆக இருந்தது. ஸ்டிரைக் ரேட் 167.92ஆக இருந்தது.

பரிசு: ரூ.15 லட்சம்

4. எமர்ஜிங் பிளேயர் (வளரும் இளம் வீரர்) - சாய் சுதர்சன் (759 ரன்கள்)

ஐபிஎல் போட்டிகளில் இளம் வயதில் அசத்தும் வீரர்களுக்கு அளிக்கப்படும் விருதை 23 வயதாகும் சாய் சுதர்சன் வென்றுள்ளார்.

இந்த சீசனில் குஜராத் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய சாய் சுதர்சன் 759 ரன்களை எடுத்துள்ளார்.

5. சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - வைபவ் சூர்யன்ஷி - 206.6 ஸ்டிரைக் ரேட்

ஐபிஎல் தொடரில் அதி வேகமாக பேட்டிங் ஆடும் வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.

பரிசு: எலெக்ட்ரிக் காரை பரிசாகப் பெற்றார்.

6. அதிக சிக்ஸர்கள் - நிகோலஸ் பூரன் (40 சிக்ஸர்கள்)

7. அதிக பவுண்டரிகள் - சாய் சுதர்சன் (88 ஃபோர்ஸ்)

8. அதிக டாட் பந்துகள் - முகது சிராஜ் ( 151 டாட் பந்துகள்)

9. சிறந்த கேட்ச் - கமிந்து மெண்டிஸ் (டெவால்டு பிரீவிஸுக்கு எதிராக பிடித்தது)

10. ஃபேர் பிளே விருது - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)

11. ஃபேண்டஸி கிங் - சாய் சுதர்சன் - 1495 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com