
இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இலக்கு என்ன என்பது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22) தொடங்குகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறும் நிலையில், மற்ற அணிகள் தங்களது போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸின் இலக்கு என்ன?
ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையை வெல்வதே பஞ்சாப் கிங்ஸின் உடனடி இலக்கு எனவும், பஞ்சாப் கிங்ஸ் அணியை சிறந்த அணியாக உருவாக்குவதே அடுத்த இலக்கு எனவும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸின் இலக்கு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது. இதுவரை விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிகளிலேயே மிகவும் சிறந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை உருவாக்கப் போகிறோம் என முதல் நாள் பயிற்சியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர்களிடத்தில் கூறினேன். அந்த பயணத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால், இந்த மாற்றம் ஒரே நாளில் வந்துவிடாது. அதனை வீரர்கள் தங்களது கடின உழைப்பால் உருவாக்க வேண்டும் என்றார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி மார்ச் 25 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் அதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.