மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனி முன்னதாக களமிறங்க வேண்டும்: வாட்சன் பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டார் நேர்காணலில் வாட்சன் அளித்த பேட்டி...

News image
வாட்சன், தோனி.- படம்: வாட்சன் | பேஸ்புக்
Updated On :29 மார்ச் 2025, 8:44 am

DIN

நேற்றிரவு சேப்பாக்கில் நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியைச் சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது.

இதில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும் தோனி முன்னதாகவே களமிறங்கி இருக்கலாம் என்ற விமர்சனம் அவர்மீது எழுந்து வருகிறது.

இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் வாட்சன் பேசியதாவது:

தோனி முன்னதாக இறங்க வேண்டும்

16 பந்துகளில் 30 ரன்களை அடித்தார் தோனி. இதைப் பார்க்கதான் சிஎஸ்கே ரசிகர்கள் வருகிறார்கள்.

தோனி இன்னமும் வரிசையில் முன்னதாக களமிறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

எனது கருத்துபடி, அஸ்வினுக்கு முன்பாக தோனி களமிறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை தோனி பிடித்திருக்க வேண்டும்.

கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அழகாக விளையாட முடியுமென தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்.

ருதுராஜ் மீண்டும் தொடக்க வீரர் ஆகலாம்

தோனி இன்னும் முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக காட்ட முடியுமென உண்மையாலுமே நம்புகிறேன்.

எப்படியாகினாலும் இது தோனிக்கு புதியது கிடையாது. ஓய்வுபெற்றபிறகு கடைசி சீசனிலும் கடைசியாகத்தான் விளையாடினார்.

கேப்டன் ருதுராஜ் 4 பந்துகளில் டக் அவுட்டானார். சிஎஸ்கேவின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் சொதப்பியது.

ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். ஹேசில்வுட்டுக்கு எதிராக அவரே இடம் கொடுத்து விளையாடியது அவரது இயல்பு அல்ல.

சிஎஸ்கே அணி சமநிலையில் இல்லை

பொதுவாக ருதுராஜ் நின்ற இடத்தில் இருந்து பந்துக்கு எதிர்வினை ஆற்றுவார். ஆனால், அவர் செய்தது அழுத்தத்தைக் காட்டுகிறது.

தீபக் ஹூடா ஆட்டமிழக்கக் கூடாதென்பது போலவே விளையாடுகிறார். சாம் கர்ரணை 5ஆவதாக ஆட வைப்பதும் கேள்விக்குறியே. 7ஆவதாக விளையாட வைக்கலாம்.

தற்போதைக்கு, சிஎஸ்கே அணியில் சமநிலை இல்லை. தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்றிருக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.