பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

அஸ்வனி குமார்

படம் | AP

Updated On :31 மார்ச் 2025, 4:13 pm

DIN

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் விளையாடியது.

அறிமுக வீரர் அஸ்வனி குமார் அசத்தல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். கேகேஆர் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. நரைன் 0 ரன்களிலும், டி காக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின், கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கேப்டன் ரஹானேவை அறிமுக வீரர் அஸ்வனி குமார் 11 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அதிரடியாக விளையாடி கொல்கத்தாவுக்கு நம்பிக்கையளித்த ரகுவன்ஷி 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. வெங்கடேஷ் ஐயர் (3 ரன்கள்), ரிங்கு சிங் (17 ரன்கள்), மணீஷ் பாண்டே (19 ரன்கள்), ஆண்ட்ரே ரஸல் (5 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ரமன்தீப் சிங் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிரடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு போதுமானதாக இல்லை.

16.2 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய இளம் வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், ஹார்திக் பாண்டியா, விக்னேஷ் புதூர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வனி குமார் படைத்துள்ளார்.

117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.