
தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு ஆதரவாக இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 தரவரிசைக்கான போட்டிகள் ஜுன் மாதம் முதல் தொடங்கவிருக்கின்றன.
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடிவரும் சாய் சுதர்சனை இந்தத் தொடரில் தேர்வு செய்ய வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஐசிசி ரிவிவ் நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரி பேசியதாவது:
இளைஞர் சாய் சுதர்சனை நான் அனைத்து வடிவிலான (டி20, ஒருநாள், டெஸ்ட்) ஆட்டத்துக்கும் ஏற்றவராகப் பார்க்கிறேன். அவர் மிகவும் கிளாஸான வீரராக இருப்பதால் எனது கவனம் அவர் மீதே இருக்கிறது.
இடது கை பேட்டராக இருக்கும் சாய் சுதர்ஷனனின் தொழில்நுட்பம், அவர் விளையாடும் விதத்தை வைத்தும் அவர்தான் முதல் நபராக டெஸ்ட் அணியில் தேர்வாக வேண்டுமென இங்கிலாந்தின் பிட்ச்சை அறிந்தவராக நான் இதைக் கூறுகிறேன்.
ஷ்ரேயாஸ் ஐயர் கம்பேக் தரலாம். ஆனால், அதுவும் போட்டி நிறைந்ததாக இருக்கும். வெள்ளைப் பந்தில் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்ற வீரர்களையும் பார்க்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.