அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்! சென்னை போராடி தோல்வி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

News image
- AP
Updated On :3 மே 2025, 5:57 pm

DIN

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் ஆரம்ப முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். பெத்தேல் 55(33 பந்துகள்), விராட் கோலி 62(33 பந்துகள்) ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து களம்கண்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க உள்ளே ஷெப்பர்ட் வந்தார். அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஷெப்பர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி காட்டிய ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா இணை ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டதால் ஆட்டம் இறுதிவரை பரபரப்பாக சென்றது. இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 94 ரன்கள் (5 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகள்) சேர்த்து லுங்கி இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பை 6 ரன்களில் நழுவவிட்டார்.

எனினும், கடைசி வரை போராடிய ஜடேஜா 45 பந்துகளில் 77 ரன்கள்(2 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள்) சேர்த்தார்.

இறுதி ஓவரில், நோ-பால் வீசப்பட்டாலும், அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம், இந்த தொடரில் 9-ஆவது தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் தழுவியுள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.